/* */

குழந்தைகள் விற்பனை பற்றி ஆராய சிறப்பு குழு அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் உறுதி!

குழந்தைகள் விற்பனை பற்றி ஆராய சிறப்பு குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

HIGHLIGHTS

குழந்தைகள் விற்பனை பற்றி ஆராய சிறப்பு குழு  அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் உறுதி!
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா. 

குழந்தைகள் விற்பனை பற்றி ஆராய சிறப்பு குழு அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் உறுதி

குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்தார்.

திருச்செங்கோடு அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்த அரசு பெண் மருத்துவர் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக எழுந்த புகாரில் புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு பெண் மருத்துவர் அனுராதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய எந்த வன்முறையையும், குற்றச் செயல்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக பொதுமக்களிடம் இருந்து ஒரு துருப்பு சீட்டு போல ஒரு தகவல் கிடைத்தது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர், மூன்றாவது பிரசவத்திற்காக வரும் பெண்களை மூளைச்சலவை செய்து குழந்தையை இடைத்தரகர்கள் மூலமாக விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டு, அந்த தகவல் முழுவதும் உண்மை என்று கண்டறியப்பட்டது. உடனடியாக உயர் அதிகாரிகளிடம் இது குறித்து கலந்தாலோசித்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பெண் மகப்பேறு மருத்துவருக்கு, இச்செயலில் தொடர்பு உள்ளதற்கான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றது.

அதன் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பெண் மருத்துவருக்கு சொந்தமான இரண்டு கிளினிக் திருச்செங்கோட்டில் உள்ளது. அவர் மகப்பேறு மருத்துவர் என்பதால் மகப்பேறு, கருக்கலைப்பு சம்பந்தமாக அவரதுகிளினிக்கை யாராவது அணுகி இருக்கலாம், இதற்கான தடயங்கள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி ஆணைக்கிணங்க, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மேற்பார்வையில் அந்த இரண்டு மருத்துவமனைகளும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன . இக்குற்றம் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் உள்துறை செயலர்களிடம் விரிவாக ஆலோசனைகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்ட நடவடிக்கையாக, இதற்காக சிறப்பு குழுக்களை அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

இடைத்தரகரை விசாரித்ததில் அந்த அரசு மருத்துவர் கருக்கலைப்பு செய்ய வந்த பெண்ணை வற்புறுத்தி குழந்தை பெற வைத்து அந்த குழந்தையை விற்பனை செய்ததாகவும், மூன்றாவது பிரசவத்திற்காக வரும் ஏழைப் பெண்களை மூளை சலவை செய்து அக்குழந்தையை விற்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஊர்ஜிதமாகியுள்ளது. குழந்தையை தத்து கொடுப்பதற்கு ரத்த உறவாக இருக்க வேண்டும், வருவாய் கோட்டாட்சியரின் சான்றிதழ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருக்கும் போது அவற்றை மீறி இந்த அரசு மருத்துவர் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி அதற்கான குழு அமைக்கப்பட்டு விரைவில் பிரச்சனை குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்றார்.

Updated On: 20 Oct 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...