/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை: விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி., பாராட்டு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்திய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, மாவட்ட எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை: விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி., பாராட்டு
X

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சிறப்பாக விசாரணை நடத்திய, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர், ராம்ஜி நகரைச் சேர்ந்த ராமதாஸ்(55) மற்றும் செல்வராஜ்(60) ஆகியோர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

மேலும், ராமதாஸ் அதே பகுதியைச் சேர்ந்த வேறு இண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது சம்மந்தமாக புகாரின்பேரில், நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராமதாஸ், செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்குகள் நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த 4ம் தேதி வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளி ராமதாசுக்கு இரண்டு வழக்கில் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், செல்வராஜூக்கு ஒரு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த, அப்போதைய நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, ஏட்டு ராணி ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி., சாய்சரன் தேஜஸ்வி பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 5 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!