/* */

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நல்லிபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்.

நாமக்கல் அடுத்த லக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி, இவரது மகன் தினேஷ்குமார் (17). அவர், நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளி விடுமுறை விடப்பட்டதால், அவர் சம்பவத்தன்று மதியம் 1 மணிக்கு, நல்லிபாளையத்தில் உள்ள வைத்தியலிங்கம் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

அப்போது, கிணற்றில் தவறி விழுந்த தினேஷ்குமார், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து மாணவர் உடலை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 April 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு