/* */

நாமக்கல்லில் திருட்டுப்போன 2 டூவீலர்கள் மீட்பு: 2 பேர் கைது

நாமக்கல் நகரில் அடுத்தடுத்து டூ வீலர்களை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து வாகனங்களை மீட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் திருட்டுப்போன 2 டூவீலர்கள் மீட்பு: 2 பேர் கைது
X

பைல் படம் 

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மணி (34), கூலி தொழிலாளி. அவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு உதவியாக வந்த மணி, சம்பவத்தன்று காலை 7 மணிக்கு, ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு டீ கடை முன்பு தனது டூ வீலரை நிறுத்திவிட்டு, ஆஸ்பத்திரிக்குள் சென்றார். மாலை 6 மணிக்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது டூ வீலர் மாயமானது. அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மணி இது குறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

* நாமக்கல்–பரமத்தி ரோடு, இ.பி., காலனியை சேர்ந்தவர் மதன்ராஜ் (28), லாரி உரிமையாளர். அவர், சம்பவத்தன்று பகல் 11:30 மணிக்கு, தனது தாயாரின் டூ வீலரை எடுத்துக்கொண்டு, நாமக்கல் நகரில் மணிக்கூண்டு அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் மருந்து வாங்க சென்றார். மருந்து வாங்கிக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, டூ வீலர் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மதன்ராஜ், இது குறித்து, நாமக்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டுப்போன 2 வீலர்களையும் தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், டூ வீலர்களை திருடியது, கரூர் மாவட்டம், வேப்பம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (45) மற்றும் நாமக்கல் போதுப்பட்டி அடுத்த லக்கம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மொபெட்டுகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Oct 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?