/* */

நாமக்கல்லில் ரேசன் கார்டு கேட்டு பெண் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் நகரில், ரேசன் கார்டு கேட்டு பெண் ஒருவர், தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ரேசன் கார்டு கேட்டு பெண் காத்திருப்பு போராட்டம்
X

நாமக்கல் சிவில் சப்ளைஸ் தாசில்தார் அலுவலகம் முன்பு,  ரேசன் கார்டு கேட்டு, கோமதி என்ற பெண் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோமதி. இவருடய கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கோமதி, விவசாய கூலி வேலை செய்து தனியாக வசித்து வருகிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு கோமதி, ரேசன்கார்டு தொலைந்து விட்டதாக கூறி புதிய ரேசன்கார்டு கேட்டு நாமக்கல் வட்டவழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். இதுவரை அவருக்கு ரேசன் கார்டு வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் கோமதி அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென ரேஷன்கார்டு காணாமல் போனதற்கான போலீஸ் எப்ஐஆர் கேட்டுள்ளனர். இதற்காக, தனியார் கம்ப்யூட்டர் சேவை மையத்தில் விண்ணப்பித்தும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த கோமதி, திடீரென நாமக்கல் தாலுக்கா சிவில் சப்ளைஸ் தாசில்தார் அலுவலகம் முன்பு ரேசன் கார்டு கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம், சிவில் சப்ளைஸ் தாசில்தார் பிரகாசம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியதையடுத்து கோமதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Updated On: 16 March 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...