/* */

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் : எல்லா மாவட்டத்தில் இருந்தும் வரலாம்

நாமக்கல்லில் வருகிற 20ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் : எல்லா மாவட்டத்தில் இருந்தும் வரலாம்
X

பைல் படம்.

நாமக்கல்லில் வருகிற 20ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20ம் தேதி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும். இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகளும் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறலாம். வேலைதேடுவோர் மற்றும் மற்றும் வேலை வாய்ப்பு அளிப்போர், டிஎன்பிரைவேட்ஜாப்ஸ்.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் பதிவு செய்து இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வேலை வேண்டி விண்ணப்பிப்போர் தங்களுடைய பயோ டேட்டா, உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன், கொரோனா நடைமுறை விதிகளை அனுசரித்து முகாமிற்கு வந்து பயன்பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசம். மேலும் விபரம் பெற 04286 - 222260 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Nov 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  3. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  4. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  5. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  6. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  10. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை