திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
கோப்பு படம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகர் பகுதி மணவளநகர், புட்லூர், ஈக்காடு, திருப்பாச்சூர் பாண்டூர், பூண்டி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம்,சோழவரம், புதுப்பாளையம், புது வாயில், கவரப்பேட்டை, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது.
கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமானதால் மக்கள் வெளியே நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக வேண்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காட்சி அளித்து வந்த நிலையில்,திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இடியுடன் கூடிய பலத்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழைநீர் ஆனது தாழ்வான இடங்களில் நிரம்பியது சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது.
கத்திரி வெயில் மற்றும் கோடை வெப்பத்தை அனுபவித்து வந்த மக்களுக்கு பெரிய வரப்பிரசாதம் போல் இந்த மழை பெய்துள்ளதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். வெப்ப அலையில் சிக்கி வெளியே நடமாட முடியாத நிலையில் இருந்தத மக்களுக்கு தற்போது நிலவும் குளிர்ச்சியான சூழலை அனுபவித்து ரசிக்கின்றனர்.
தொடர்ந்து இன்னும் மழை பெய்யும் என் வானிலை மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரு மகிழ்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu