/* */

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: நாமக்கல்லில் இன்றைய விலை விபரம்

டீசல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசாவும்,பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 பைசாவும் அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு சமமாக, மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை கம்பெனிகள் கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கொரோன ஊரடங்கு காலத்திலும், முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும் எண்ணை கம்பெனிகள் தவறாமல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர். இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தினசரி டீசல் விலை உயர்வால் லாரிகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்யமுடியாமல் சரக்குப்போக்குவரத்து தொழில் மிகவும் நெருக்கடியில் உள்ளது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல்பங்குகளில் இன்றைய விலை நிலவரம்: டீசல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.101.56 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.105.45 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ. 109.-0 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Oct 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  2. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  3. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  4. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  5. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  6. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  7. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  8. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  9. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு