/* */

அக்னிவீர்வாயு தேர்வு :ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு..!

அக்னிவீர்வாயு தேர்வில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அக்னிவீர்வாயு தேர்வு :ஆன்லைனில்  விண்ணப்பிக்க அழைப்பு..!
X

அக்னிவீர்வாயு தேர்வு.(கோப்பு படம்)

நாமக்கல் :

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர்வாயு போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர்வாயு போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கு 17.08.2023 வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். 13.10.2023 முதல் இத்தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரரின் பிறந்த தேதி 27.06.2003 முதல் 27.12.2006 க்குள் இருக்கவேண்டும். திருமணமாகாத ஆண் அல்லது பெண்ணாக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு (10+2) கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடப்பிரிவைப் படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள்.


இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத் தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களை நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை, அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது அலுவலக தொலைபேசி எண் 04286 -222260 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் மேலே கண்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள கியு ஆர் கோடை ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் பங்கு பெற்று பயனடையுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 1 Aug 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...