/* */

நாமக்கல்லில் ஒரேநாளில் 809 பேருக்கு கொரோனா- 9 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 34,005 ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஒரேநாளில் 809 பேருக்கு கொரோனா-  9 பேர் பலி
X

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சுகாதாரத்துரை வெளியிடுள்ள அறிக்கையின்படி, இன்று நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரும், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,005 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26,283 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7,451 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை, 271 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 2 Jun 2021 3:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  3. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  4. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  6. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  7. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...