/* */

புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த பெண்

Erode news- ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே பெண் ஒருவர் அரசு பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.

HIGHLIGHTS

புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த பெண்
X

Erode news- அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

Erode news, Erode news today- புஞ்சை புளியம்பட்டி அருகே பெண் ஒருவர் அரசு பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.

கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து புஞ்சை புளியம்பட்டி அருகே வந்த போது, அந்த பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு இருந்த அந்த பெண் திடீரென அந்த அரசு பேருந்தின் மீது கல் எடுத்து வீசினார். இதில், அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து நொறுங்கியது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி தப்பினர்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தது புஞ்சை புளியம்பட்டி அடுத்து நல்லூர் பண்ணாடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரக்கால் (வயது 57) என்பதும், இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 May 2024 10:15 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...