/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஒலிம்பிக் வீரர்களை உருவாக்க புதிய பயிற்சி மையம்

நாமக்கல் மாவட்டத்தில் ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகளை அதிகளவில் பங்கேற்க செய்யும் வகையில் சிறப்பு பயிற்சி மையம் விரைவில் உருவாக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஒலிம்பிக் வீரர்களை உருவாக்க   புதிய பயிற்சி மையம்
X

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் (பைல் படம்)

நாமக்கல் மாவட்டத்தில் ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகளை அதிகளவில் பங்கேற்க செய்யும் வகையில் சிறப்பு பயிற்சி மையம் விரைவில் உருவாக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் 1,000 புதிய விளையாட்டு பயிற்சி மையம் உருவாக்கப்பட உள்ளது. அதில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளைப் பயிற்சியில் ஈடுபத்தி, வருகின்ற 2024-ஆ-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 2 புதிய கேலோ இந்தியா பயிற்சி திட்ட மையம் அமைய உள்ளது. இங்கு வில்வித்தை, தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள், வாள்சண்டை, ஹாக்கி, ஜூடோ, பாய்மர படகோட்டுதல், சுடுதல், நீச்சல், மேசைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய 14 விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் கால்பந்து மற்றும் உள்நாட்டு புகழ்பெற்ற ஏதேனும் ஒரு விளையாட்டு தேர்வு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் மூன்று விளையாட்டுக்களைத் தேர்வு செய்து, தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களையும், ஒரு விளையாட்டிற்கு 30 வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஆரம்ப மானியமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். அதன்மூலம் மைதான வசதிகளை தயார் செய்தல், மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். மேலும் வருடாந்திர தொடர் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 22 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்