/* */

நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா: கலெக்டர் கொடியேற்றுகிறார்

நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா: கலெக்டர் கொடியேற்றுகிறார்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர். நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா: கலெக்டர் கொடியேற்றுகிறார்

நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை 15ம் தேதி காலை 9.10 மணிக்கு, மாவட்டவிளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். நிகழ்ச்சியில், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு அவர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறார். மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

கொரோனா தொற்று பரவல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வழக்கமாக சுதந்திர தின விழாவில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவித்தல் மற்றும் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடித்து விழா நடைபெறும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Aug 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  6. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  9. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...