/* */

கொல்லிமலை மலைவாழ் மக்களிடம் நாமக்கல் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!

கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம், நாமக்கல் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் ராமலிங்கம் ஆதரவு திரட்டினார்.

HIGHLIGHTS

கொல்லிமலை மலைவாழ் மக்களிடம்   நாமக்கல் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!
X

சேந்தமங்கலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளர் ராமலிங்கம் பேசினார்.

நாமக்கல்:

கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம், நாமக்கல் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் ராமலிங்கம் ஆதரவு திரட்டினார்.

சேந்தமங்கலத்தில், பாஜக கூட்டணி கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். சேந்தமங்கலம் ஒன்றியத் தலைவர் பாண்டியன், மாநில ஊடகப்பிரிவு நிர்வாகி லோகேந்திரன், தமாகா மாவட்ட தலைவர் இளங்கோ, பாமக மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி, ஐஜேகே மாநில இளைஞரணி துணை செயலாளர் முத்துராஜா, அமமுக மாவட்ட அவைத் தலைவர் பன்னீர்செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:

40 ஆண்டுகளுக்கு முன்பாக சேலத்தில் இருந்து கரூச்ஞூ வரை அகல ரயில் பாதை திட்டத்தைக் கொண்டு வர காரணமாக இருந்தவன் நான். தற்போது அந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அரசியலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறேன். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் இருந்தது. தற்போது வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. அதற்குக் காரணமானவர் பிரதமர் நரேந்திர மோடிதான். எனவே அவருடைய கரங்களை வலுப்படுத்த அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, எருமப்பட்டியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ராமலிங்கம், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினார். பின்னர், கொல்லிமலைக்கு சென்ற பாஜக வேட்பாளர் ராமலிங்கம் அங்குள்ள மலைவாழ் மக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கொல்லிமலையில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்தார். திரளான பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 31 March 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...