/* */

நாமக்கல், ராசிபுரம் ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்

Train News Tamil -நாமக்கல், ராசிபுரம் ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்

HIGHLIGHTS

நாமக்கல், ராசிபுரம் ரயில் நிலையங்களில்  அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்
X

புதுடில்லியில் ரயில்வே கண்காணிப்புக்குழு உறுப்பினர் டி.சி.சர்மாவை, நாமக்கல் எம்.பி சின்ராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

Train News Tamil - நாமக்கல் மற்றும் ராசிபுரம் ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவேண்டும் என்று ரயில்வே வாரியத்தின் கண்காணிப்புக்குழு உறுப்பினரின் நாமக்கல் எம்பி சின்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் எம்.பி சின்ராஜ், புதுடில்லியில் ரயில்வேறு வாரிய கண்காணிப்புக்குழு உறுப்பினர் டி.சி சர்மாவை நேரில் சந்தித்து அவரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

சேலம் - கரூர் புதிய அகல ரயில் பாதை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்னை, பெங்களூர், நாகர்கோவிலில் மற்றும் பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா பரவல் காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் தற்போது, மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

அப்படி இயக்கப்படும் ரயில்கள், தற்போது நாமக்கல் மற்றும் ராசிபுரம் ரயில்நிலையங்களில் ஒரு மார்க்கத்தில் செல்லும் போது நின்றும் மறு மார்க்கத்தில் செல்லும் போது நிற்காமலும் செல்கின்றன. இதனால் சொந்த ஊரில் இருந்து பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் பொதுமக்கள், திரும்பி வரும்போது பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சேலம்-நாமக்கல்-கரூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், நாமக்கல் மற்றும் ராசிபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!