/* */

மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

தமிழ்நாடு புற்றுநோய் உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்..!
X

தமிழ்நாடு புற்றுநோய் உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் புற்றுநோயிகள் கல்வி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற விருந்தினர்கள்

தமிழ்நாடு புற்றுநோய் உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவ கல்லூரி இளநிலை மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 750க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவி மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு புற்றுநோய் உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் இளநிலை மருத்துவம் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த ஓரு நாள் கருத்தரங்கம் சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகுமாரன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரபல புற்றுநோய் மருத்துவர் ஐயப்பன் இக்கருத்தரங்கினை வழி நடத்தினார் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் தலைமை தாங்கினார்.


இந்தக் கருத்தரங்கில் மூலம் இளம் மருத்துவர்களுக்கு வழங்கும் கல்வி மூலம் பின்னாளில் சமூகவெளியில் அவர்கள் மருத்துவ சேவை செய்யும் பொழுது புற்றுநோயினால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு தக்க வழிகாட்டுதல் அளித்து உரிய நேரத்தில் உரிய சிகிச்சை பெற வழிவகை செய்யப்படும்.

இந்திய நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த சிறப்புமிக்க தொடர் கல்வி கருத்தரங்கில் புற்றுநோய் துறையில் பிரபல உயிர் சிறப்பு நிபுணர்கள் சென்னை மற்றும் காஞ்சியிலிருந்து வந்திருந்த சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் மாணவர்களிடையே உரையாற்றினர்.

மேலும் ஒவ்வொரு சிறப்பு தலைப்பின் கீழ் நடைபெறும் கருத்தரங்கு பின் மாணவர்களுக்கிடையே சந்தேக உரையாடல்களையும் அவ்வப்போது சிறப்பு அழைப்பாளர்கள் நிவர்த்தி செய்தனர்.


இந்த நிகழ்ச்சிகள் மூலம் இளம் மருத்துவர்கள் எளிதில் தங்கள் அனுபவங்களை பெற்று வரும் காலங்களில் பொதுமக்களுக்கு மிகுந்த சேவை செய்ய இது போன்ற கருத்தரங்கள் வாய்ப்பாக அமைந்துள்ளது என புற்றுநோய் உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலமுருகன் தெரிவித்தார்.

விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் மருத்துவர் ஈஸ்வரி மற்றும் கண்காணிப்பாளர் மருத்துவர் பூபதி ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

Updated On: 27 April 2024 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...