ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
தகிக்கும் வெயில்.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் குழந்தைகள் முதல் முதியவா்கள்வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு பிப்ரவரியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பின்னர், மார்ச், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தொடர்ந்த படிப்படியாக அதிகரித்த வெயிலின் தாக்கத்தால் மதிய நேரங்களில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால், ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடியே காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வருகிறார்கள். ஈரோட்டில் நேற்று முன்தினம் 109.4 டிகிரி வெயில் பதிவானது. இது, நடப்பு கோடை காலத்தில் 2வது முறையாக உச்சம் தொட்டுள்ள வெயிலின் அளவாகும்.
இந்நிலையில், நேற்று 107.6 டிகிரி வெயில் பதிவான நிலையில், 2வது நாளாக இன்று 107.6 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. இந்த கடும் வெயில் காரணமாக காலை 11 மணி முதலே வெப்ப அலை வீசியது. இதனால் சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்தில் ஆழ்ந்தனர். மேலும், வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறி, ஏர்கூலர் இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதால் ஈரோடு மாவட்ட மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தூக்கத்தை தொலைத்து திணறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu