/* */

பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளியை ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்துடன் இணைந்து உண்டு உறைவிடப் பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
X

பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளித்து புகைப்படம் எடுத்துகொண்ட போது.

பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள விசூர் ஊராட்சியில் பள்ளிச்செல்லா பள்ளி இடை நின்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா இணைந்து நடத்தும் பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இதில் சென்ற கல்வி ஆண்டில் பயின்று முறையான பள்ளியில் சேர்க்கப்பட உள்ள மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் கிருபாகரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை வள்ளி, விசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

இவர்களுக்கு கல்வியின் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை உதாரணங்களுடன் எடுத்துக் கூறி உத்வேகப்படுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் வட்டார மேற்பார்வையாளர் செந்தில் முருகன் ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஷ் முதுநிலை திட்ட மேலாளர்கள் தூயவன் சுந்தர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதேபோன்று காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பள்ளியிலும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை திட்ட மேலாளர் ஜெகத்ரட்சகன் ஆசிரியர்கள் மனிஷா நிஷா அனுஸ்ரீ ஆகியோர் செய்தனர்.

Updated On: 27 April 2024 12:45 PM GMT

Related News