வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!

வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
X

சீரான வளர்ச்சியில் காணப்படும் நெல்நாற்றுகள். வேளாண் உதவி இயக்குனர் திலகவதியுடன் விவசாயிகள் வயலில் உள்ளனர்.

வேளாண் தொழில்நுட்பத்திறன்களை பயன்படுத்தி 'ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம்' மதுக்கூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

வேளாண்மை துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் 15 முதல் 20 சதவீத மகசூலை அதிகரிக்கும் நோக்கில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்று வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுக்கூர் வட்டாரத்தில் 48 வருவாய் கிராமங்கள் உள்ளது. 48 வருவாய் கிராமங்களும் ஆறு வேளாண் உதவி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பரப்பின் அடிப்படையில் ஆறு முதல் 10 கிராமங்கள் வரை வேளாண் உதவி அலுவலர்களால் அனைத்து வேளாண் பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வேளாண் உதவி அலுவலர்களால் பயிர் கண்காணிப்புடன் பராமரிப்புக்கான தொழில்நுட்பங்களும் உரிய காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசின் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வருவாய் கிராமம் வாரியாக திட்டம் செயல்படுத்த வழிகாட்டு முறைகள் தரப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் எப்பயிர் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறதோ அதுவே வருவாய். கிராமத்துக்கான பயிராக தேர்வு செய்யப்படுகிறது.

பின் தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் அனைத்து விவசாயிகளும் பார்வையிடத்தக்க வகையில் சாலை ஓரங்களில் அமைந்துள்ள 10 முதல் 15 ஏக்கர் வரையிலான பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு குறிப்பிட்ட அந்த பயிருக்கான தொழில்நுட்பங்கள் வழங்கப்படவுள்ளன.


அதன்படி விதை முதல் விளைச்சல் களத்துக்கு செல்லும் வரை பயிர் மகசூலை அதிகரிக்கும் குறைந்த செலவிலான எளிய தொழில் நுட்ப விளக்கங்கள், மாதிரி தொழில் நுட்ப செயல் விளக்க தளைகளில் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள் நேரடியாக அறியும் வகையில் தொழில் நுட்பத்திறன்களை விவசாயிகள் அறியும் வகையில் செயல்விளக்கமாக செய்து காட்டப்படுகிறது.

இதன் மூலம் அறுவடைக்கு பின் கிடைக்கப்பெற்ற கூடுதல் மகசூலும் அனைத்து விவசாயிகளும் அறியும் வகையில் செயல் விளக்கத்தளையில் செயல் விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை உதவிஅலுவலர் பூமிநாதன் மதுக்கூர் வடக்கு அண்டமி, மோகூர், சிராங்குடி விக்ரமம், வாடிய காடு ஆகிய கிராமங்களிலும்

  • வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு வேப்பங்குளம், வாட்டாகுடி, வாட்டாகுடி உக்கடை, மன்னாங்காடு

காசாங்காடு, முத்தா குறிச்சி, ரகுநாதபுரம் போன்ற கிராமங்களிலும்

  • ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் ராமு ஆலத்தூர் முசிறி வடுகண் குத்தகை ஆலம்பள்ளம், கருப்பூர், புலவஞ்சி தளிக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களிலும்
  • சிரமேல்குடி வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் சிரமேல்குடி, ரகுநாத சமுத்திரம், இளங்காடு, அத்திவெட்டி கிழக்கு, மேற்கு ,கல்யாண ஓடை,பழவேரி காடு ஆகிய கிராமங்களிலும்
  • பெரிய கோட்டை வேளாண்மை உதவி அலுவலர் தினேஷ் பெரிய கோட்டை, சொக்கநாவூர், புளியக்குடி ,காரப்பங்காடு, கன்னியாகுறிச்சி, கழிச்சாங்கோட்டை,பாலாஜி ரகுநாத சமுத்திரம் மற்றும் மதுர பாசானிபுரம் ஆகிய கிராமங்களிலும்
  • வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் கீழக்குறிச்சி கிழக்கு, மேற்கு, ஒலயகுன்னம்,

பாவாஜி கோட்டை, நெம்மேலி மற்றும் ஆவி கோட்டை ஆகிய கிராமங்களிலும் ஒரு கிராமம் ஒரு பயிருக்கான பயிர் மற்றும் இடத்தினை தேர்வு செய்து அதனை உழவர் அலுவலர் தொடர்பு திட்ட பதிவேற்றம் செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

  • வேளாண் அலுவலர் இளங்கோ மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி செயல் விளக்க தளையில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆவணப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக பரப்புடைய கிராமங்களில் 10 ஏக்கர் வரை ஒரு செயல் விளக்கத்தையும் குறைந்த அளவு பரப்புள்ள கிராமங்களில் ஐந்து ஏக்கரில் செயல் விளக்கத்தையும் ஏற்பாடு செய்திட விவசாயிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுக்கூர் வட்டாரத்தில் வேப்பங்குளம் கிராமத்தில் விதைப்புக் கருவி மூலம் ஏடிடி59 ரகத்தினை விவசாயி வினோத் விதைப்பு மேற்கொண்டுள்ளார். மேலும் லேசர் லெவலிங் கருவி மூலம் நிலத்தை சரியான அளவில் சமப்படுத்தி விதைப்பு மேற்கொண்டு உள்ளதால் நேரடி விதைப்பு செய்துள்ள பயிர் தற்போது திருந்திய நெல் சாகுபடி பயிர் போல ஒரே அளவான உயரத்தில் நல்ல வளர்ச்சியுடன் காணப்படுகிறது.

தற்போது இருபத்தைந்து நாள் பயிராக நெல் பயிர் பூச்சி நோய் தாக்குதல் இன்றி களைகள் இன்றி சிறப்பாக உள்ளது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வேளாண்மை அலுவலர் சாய்னா, வேளாண் உதவி இயக்குனர் திலகவதியுடன் வேப்பங்குளம் கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்து விதைப்பு கருவி மற்றும் லேசர் கருவியின் நன்மைகள் குறித்து வயலில் நேரடியாக பார்த்து அறிந்தார்.

ஆய்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு செய்திருந்தார். விவசாயி வினோத் விதைப்புக் கருவி மூலம் விதைப்பதால் நீர் தேவையின் அளவு குறைவதுடன் லேசர் கருவியையும் இணைத்து பயன்படுத்தியதால் வயல் முழுவதும் ஒரே மட்டத்தில் சமன் செய்யப்பட்டு விதைப்பு செய்த விதைகள் ஒரே சீரான வளர்ச்சி அடைந்துள்ளன.

மேலும் விதைப்புக்கு முன்னரே களைக்கொல்லி தெளித்துள்ளதால் களை எடுக்கும் செலவினமும் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் முன்பட்ட குறுவையில் லேசர் கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்தி களைக்கொல்லி தெளித்து களைக்கட்டுப்பாடுடன் விதைப்பு கருவி மூலம் நேரடி விதைப்பு செய்து நாற்றங்கால் நடவு, நீர் மற்றும் ஆள் செலவையும் குறைத்து

வேளாண் துறையின் தொழில்நுட்பங்களை ஏற்ற நேரத்தில் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிகமாக மகசூல் பெற வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!