/* */

ஆன்லைன் வர்த்தகம் மூலம் பல கோடி மோசடி: முதலீட்டாளர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

Online Fraud Complaint -ஆன்லைன் வர்த்தகம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஆன்லைன் வர்த்தகம் மூலம் பல கோடி மோசடி: முதலீட்டாளர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்
X

ஆன்லைன் வர்த்தகம் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், புகார் அளிப்பதற்காக நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தனர்.

Online Fraud Complaint -ஆன்லைன் வர்த்தகம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாந்த, முதலீட்டாளர்கள் கூறுகையில், வாட்ஸ் அப் மூலம் ஆன்லைன் டிரேடிங் குறித்த தகவல் பரிமாற்றப்பட்டது. ஆர்பிஎக்ஸ் எக்ஸ்சேன்ஜ் என்ற ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் இத்தகவலை வாட்ஸ் அப் மூலம் பலருக்கு அனுப்பியது. இந்த நிறுவனத்தை நம்பி நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் குறைந்தபட்சம ரூ. 5,000 முதல் அதிகபட்சம் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அவ்வாறு முதலீடு செய்யும் நபர்களுக்கு நாள்தோறும் முதலீட்டு தொகையில் 10 சதவீதம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் கூறியபடி கமிஷன் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து பலரை நாங்கள் இதில் அறிமுகப்படுத்தினோம்.

அவர்களும் இதில் முதலீடு செய்தனர். இச்சூழலில் சமீப காலமாக கமிஷன் தொகை எங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தின் தலைமையிடம் எது என்பது உள்ளிட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. வாட்ஸ் அப் குரூப் அட்மின் எண்ணை தொடர்பு கொண்டாலும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாக தகவல் வருகிறது.

இரு மாதங்களுக்கு முன்னர் தான் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. அதனால் முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகை திரும்பப் பெற முடியவில்லை. இம்மோசடி நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளது. பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

எனவே போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து எங்களின் பணத்தை மீட்டுத் தருவதுடன், எங்கள் வங்கிக் கணக்கை சம்மந்தப்பட்ட நிறுவனம் உள்பட வேறு யாரும் தவறாக பயன்படுத்த முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி ஆபீசில் மனு அளித்துள்ளோம் என்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Sep 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...