/* */

மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி

Namakkal news- மோகனூர் வடக்கு துணைஅஞ்சலகம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால், பொதுமக்களை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம்  திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
X

Namakkal news-  மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம் (மாதிரி படம்)

Namakkal news, Namakkal news today- நிர்வாக காரணங்களுக்காக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மோகனூர் வடக்கு துணைஅஞ்சலகம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால், பொதுமக்களை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில், பல ஆண்டுகளாக இரண்டு துணை தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. மோகனூர் மற்றும் பேட்டப்பாளையம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சர்க்கரை ஆலை, மணியங்காளிப்பட்டி ஆகிய பகுதிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகம், டவுன் பஞ்சாயத்து அலுவலகம், மின்வாரிய அலுவலகம், மற்றும் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

மோகனூர் டவுன் பஞ்சாயத்து மற்றும் பேட்டப்பாளையம் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான கடிதங்கள், ஸ்பீடு போஸ்ட் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. மேலும், ஏராளமான பொதுமக்கள், இரண்டு துணை தபால் ஆபீஸ்களிலும், சேமிப்பு கணக்கு தொடங்கி, வரவு, செலவு மேற்கொள்வதுடன், பல்வேறு திட்டங்களில் டெபாசிட் செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், மோகனூர் டவுன் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில், பழைய போலீஸ் ஸ்டேசன் எதிரில், வடக்கு துணை தபால் அஞ்சலகம் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சலகம் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டுள்ளது. தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த அலுவலகத்தில் துவங்கப்பட்ட கணக்குகள் அனைத்தும், கலைவாணி நகரில் செயல்படும் மோகனூர் துணை தபால் ஆபீசில் இணைக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களுடைய கணக்குகளில் பணம் செலுத்துவதற்கும், பணம் பெறுவதற்கும், அஞ்சல் தொடர்பான அனைத்து சேவைகளையும், மோகனூர் துணை அஞ்சலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மோகனூர் வடக்கு துணை தபால் அஞ்சலகம், பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்ததால், பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

தலைமை இடத்தில் இருந்து, 1.5 கி.மீ., தூரத்துக்குள் உள்ள தபால் அலுவலகங்களை ஒன்றாக இணைக்க, அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை அடுத்து, மோகனூர் வடக்கு துணை அஞ்சல் அலுவலகம் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல் தில்லைபுரம், திருச்செங்கோடு வடக்கு துணை அஞ்சல் அலுவலகங்களும் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் நிர்வாக காரணங்களுக்காகவே இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது என அவர் கூறினார்.

Updated On: 8 May 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...