/* */

புதுச்சத்திரம் அருகே கார் மீது மினி லாரி மோதி விபத்து: 7 பேர் காயம்

புதுச்சத்திரம் அருகே, கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே கார் மீது மினி லாரி மோதி விபத்து: 7 பேர் காயம்
X

புதுச்சத்திரம் அருகே கார் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.

புதுச்சத்திரம் அருகே, கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுச்சத்திரம் அருகே உள்ள ரெட்டிப்புதூர் பகுதியில் சென்றபோது, முன்னால் இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற மினி லாரி மீது, கன்டெய்னர் லாரி மோதியது. இதனால் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டின் நடுவில் இருந்து தடுப்பு சுவரில் ஏறி, எதிர் திசையில் ரோட்டில் இறங்கி அவ்வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் மற்றும் மினி லாரி டிரைவர் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நடு ரோட்டில் நின்ற விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் படுத்தினர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Jun 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...