/* */

அரசு புறம்போக்கு நிலங்களை நவீன கருவி மூலம் அளவீடு: கலெக்டர் ஆய்வு

அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள ஏரி, நில அளவை துறையினரால், நவீன நில அளவை கருவியான டிஜிபிஎஸ் கருவி மூலம் அளவீடு செய்யும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரசு புறம்போக்கு நிலங்களை நவீன கருவி மூலம் அளவீடு: கலெக்டர் ஆய்வு
X

நாமக்கல் தாலுகா சிலுவம்பட்டி கிராமத்தில், நவீன டிஜிபிஎஸ் கருவி மூலம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் அளவீடு செய்யும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், சிலுவம்பட்டி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள ஏரி, நில அளவை துறையினரால், நவீன நில அளவை கருவியான டிஜிபிஎஸ் கருவி மூலம் அளவீடு செய்யும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், டிஜிபிஎஸ் கருவியினைக் கொண்டு நீர்நிலைகளை அளந்து வரைபடம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன நில அளவை கருவியினை கொண்டு அளவுப்பணி செய்வதால் பூமியில் உள்ள அச்சரேகை மற்றும் தீர்க்கரேகையை கணக்கிட்டு, இருக்குமிடம் சாட்டிலைட் மூலம் எல்லையினை துல்லியமாக நிர்ணயம் செய்யப்பட்டு கூகுள் எர்த் சாட்டிலைட் மேப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், நீர்நிலைகளின் எல்லைகளை இந்த நவீன கருவி கொண்டு அளவீடு செய்யும் பணி தமிழக அரசு மற்றும் ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது. இப்பணியினால் வருங்காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை கூகுள் எர்த் சாட்டிலைட் மூலம் எளிதில் கண்காணிக்கலாம். இது வரை நாமக்கல் மாவட்டத்தில் 80 நீர்நிலைகள் இக்கருவியின் மூலம் அளவீடு செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், நாமக்கல் தாலுக்கா, சிலுவம்பட்டி கிராமத்தில், அரசு புறம்போக்கு ஏரி, நில அளவை துறையினரால், நவீன நில அளவை கருவி (டிஜிபிஎஸ்) மூலம் அளவீடு செய்யும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நவீன முறையில் நில அளவீடு செய்யும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். ஆய்வின் போது நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, நாமக்கல் மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Jun 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?