/* */

மின்சார வயரை மாற்றியமைக்க கொமதேக ரூ.4.76 லட்சம் நன்கொடை

போதுப்பட்டி அரசு பள்ளி வளாகம் வழியாக செல்லும் மின்சார வயரை மாற்றியமைக்க கொமதேக ரூ.4.76 லட்சம் நன்கொடை வழங்கியது.

HIGHLIGHTS

மின்சார வயரை மாற்றியமைக்க கொமதேக ரூ.4.76 லட்சம் நன்கொடை
X

நாமக்கல் போதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வழியாகச் செல்லும் மின்சார வயரை மாற்றியமைக்க, பள்ளி தலைமை ஆசிரியரிடம், மாவட்ட கொமதேக சார்பில் ரூ.4.76 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, போதுப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியின் குறுக்கே செல்லும், உயர் மின்னழுத்த கம்பியை, மாணவர்களின் பாதுகாப்பிற்காக மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்று மின்வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டது. அந்த இடத்தை அளவீடு செய்த மின்சார வாரியம், ரூ.4,76,480 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்பு நோட்டீஸ் அளித்தது.

இந்த தொகையை மின்வாரியத்திற்கு செலுத்த, நாமக்கல் எம்.பி சின்ராஜ் ஏற்பாடு செய்தார். அவரது சம்பளத்தில் இருந்தும், பொதுமக்களின் பங்களிப்படனும், மின்சார கட்டணத்திற்கான தொகை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த தொகைக்கான பேங்க் டிமாண்ட் டிராப்ட்டை, நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் துரை ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள்.

Updated On: 7 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...