/* */

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்வு: நாமக்கல் கலெக்டருக்கு முதல்வர் விருது

நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு மாநில அளவில் மூன்றாம் பரிசிற்கான விருது மற்றும் வெண்கலப் பதக்கம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

HIGHLIGHTS

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்வு: நாமக்கல் கலெக்டருக்கு முதல்வர் விருது
X

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயல்பட்ட கலெக்டர் ஸ்ரயோசிங்கிற்கு வெண்கலப்பதக்கம் வழங்கிய முதல்வர்.

சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு மாநில அளவில் மூன்றாம் பரிசிற்கான விருது மற்றும் வெண்கலப் பதக்கம் வழங்கி பாராட்டினார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சென்னையில் நடைபெற்ற, சர்வதேச மகளிர் தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். பெண் இனம் தழைத்திடும் வகையில் பெண் குழந்தைகளின் பிறப்பு, பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக சிறந்த மாவட்ட கலெக்டருக்கான மூன்றாம் பரிசிற்கான விருதினை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு வெண்கலப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை தமிழக முதல்வர் ஸ்டாலலின் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை அதிகரித்தல், மாவட்ட அளவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பினை குறைத்தல், மாவட்டத்தின் கருக்கலைப்பு விகிதத்தினை குறைத்தல், 1994ஆம் ஆண்டைய முன் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள் சட்டத்தை, மாவட்டத்தில் வலுவாக செயல்படுத்தப்பட்டு ஸ்கேன் பரிசோதனை மையங்கள் தொடர் கண்காணிப்பில் இருத்தல், மாவட்டத்தில் உயர்பிறப்பு விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களில் அதிக அளவு பயனாளிகளை பயன்பெற செய்தல், மாவட்ட அளவில் பெண் சிசு கொலையை தடுத்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலையினை ஏற்படுத்துதல், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏதும் நிகழாமல் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்தி சிறப்பாக செயலாற்றியமைக்காக நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 3ம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக சிறந்த கலெக்டருக்கான மூன்றாம் பரிசிளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு வழங்கினார்.

Updated On: 8 March 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?