/* */

புனிதவெள்ளியை முன்னிட்டு தேவாலயத்தில் சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை

Siluvai Pathai Images-புனிதவெள்ளியை முன்னிட்டு தேவாலயத்தில் சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

HIGHLIGHTS

புனிதவெள்ளியை முன்னிட்டு தேவாலயத்தில்  சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை
X

சிலுவை பாதை ( கோப்பு காட்சி.)

Siluvai Pathai Images-நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில், புனிதவெள்ளியை முன்னிட்டு, நடைபெற்ற சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும், 40 நாட்களை, தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர் அதில், ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மக்களின் பாவங்களுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ஏசு கிறிஸ்துவை நினைவு கூறும் வகையில், கிறிஸ்துவர்கள், மனம் வருந்தி தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு, ஏயேசுவின் பாடுகளை நினைவு கூறுவர். புனிதவெள்ளி என்றால் தவம். கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூறும் புனிதமான நாள். ஏசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதை குறிக்கும் நாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதை நினைவு கூறும் வகையில், இன்று புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில், சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பங்கு தந்தை செல்வம் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. அப்போது, கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்தவ தேவாலயத்தில், மும்மணி நேர தியான ஆராதனை நடந்தது.அதேபோல், நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள ஏஜி சர்ச், மோகனூர் அடுத்த பேட்டப்பாளையத்தில் உள்ள புனித செசீலி ஆலயம் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த, சிறப்பு ஆராதனையில், ஏராள மான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில், வருகிற ஏப். 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அன்று அதிகாலையில், அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 March 2024 5:13 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு