ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு
பெருந்துறை பகுதியில் தேங்கிய மழைநீர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது. தற்போது அக்னி நட்சத்திரம் நீடித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் கன மழை நீடிக்கும் என வானிலை மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, நேற்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் இன்று (மே 19) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 318.30 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று (மே.19) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மே.20) திங்கட்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 6.30 மி.மீ,
மொடக்குறிச்சி - 4.00 மி.மீ,
கொடுமுடி - 4.00 மி.மீ,
பெருந்துறை - 57.00 மி.மீ,
சென்னிமலை - 18.00மி.மீ,
பவானி - 24.00 மி.மீ,
கவுந்தப்பாடி - 12.20 மி.மீ,
அம்மாபேட்டை - 35.20 மி.மீ,
வரட்டுப்பள்ளம் - 9.20 மி.மீ,
கோபி - 9.20 மி.மீ,
எலந்தகுட்டைமேடு - 14.80 மி.மீ,
கொடிவேரி - 6.00 மி.மீ,
குண்டேரிப்பள்ளம் - 9.80 மி.மீ,
நம்பியூர் - 26.00 மி.மீ,
சத்தியமங்கலம் - 7.00 மி.மீ,
பவானிசாகர் - 4.60 மி.மீ,
தாளவாடி - 71.00 மி.மீ,
மாவட்டத்தில் மொத்தமாக 318.30 மி.மீ ஆகிலும், சராசரியாக 18.72 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu