/* */

நாமக்கல் மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டங்கள்:கலெக்டர் தகவல்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் நாளை  கிராம சபைக் கூட்டங்கள்:கலெக்டர் தகவல்
X

நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவ ட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாளை 22ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 322 கிராம ஊராட்சிகள் உள்ளன. தமிழக அரசு உத்தரவின் பேரில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை 22ம் தேதி, புதன்கிழமை காலை 11 மணிக்கு, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

இக்கூட்டத்தில். விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருட்கள். உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை வாசித்து அங்கீகரித்தல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

கூட்டங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 March 2023 5:13 AM GMT

Related News