/* */

நாமக்கல்லில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், தொடர் முழக்கப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

நாமக்கல் – பரமத்தி ரோட்டில், அரசு போக்குவரத்து கழக டிப்பா முன்பு நடந்த போராட்டத்துக்கு, கிளை தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் வேலுசாமி துவக்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில் சம்பள ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி, 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பேட்டா, இன்சென்டிவ் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பண பலன், டி.ஏ உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கிளை செயலாளர்கள் பெரியசாமி, கலைச்செல்வன், முருகேசன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?