ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு தெரிஞ்சுக்கலாமா?

7 Easy Ways to Melt Body Fat- உடல் கொழுப்பை கரைக்க வழிகள் (கோப்பு படம்)
7 Easy Ways to Melt Body Fat- ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம்!
நம்மில் பெரும்பாலோனோருக்கு உடல் கொழுப்பை கரைப்பது கடினமான காரியமாக தோன்றலாம். ஆனால் கொழுப்பு கரைப்பது அல்லது குறைப்பது சாத்தியமில்லாத விஷயம் கிடையாது. சில விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் நான்கு மாதங்களில் ஆரோக்கியமான உடல் எடைக்கு மாற முடியும். இங்கு குறிப்பிட்டுள்ள ஏழு வழிகளை தொடர்ந்து பின்பற்றினால் நல்ல பலன்களை பெறலாம். பாதியிலேயே விட்டு விடக் கூடாது. ஆண்கள், பெண்கள் இருவரும் இந்த வழிகளை பின்பற்றலாம்.
1) நாம் திடீரென எடை அதிகரித்து இருந்தால் நம்மை சுற்றி இருக்கும் நபர்கள் இதை சாப்பிட்டால் இரண்டே நாளில் எடையைக் குறைக்கலாம், இந்த ஜூஸ் எளிதில் கொழுப்பை கரைக்கும் என ஐடியா கொடுப்பார்கள். இதை முற்றிலும் தவிர்க்கவும். எடை குறைப்பு என்பது ஒரு தொடர் பயிற்சியாகும்.
2) தற்போது இருக்கும் எடையில் இருந்து ஒரு விழுக்காடு கணக்கிடவும். அதாவது நீங்கள் 100 கிலோ எடையில் இருந்தால் அதில் ஒரு விழுக்காடு ஒரு கிலோ ஆகும். இதை வார வாரம் குறைக்க முயற்சிக்கவும். ஒரு மாதத்திலேயே பலன்கள் கிடைக்கும்.
முதல் வாரத்தில் ஒரு கிலோ எடையைக் குறைத்தால் அடுத்தவாரம் 99 கிலோ இருப்பீர்கள். இப்போது 99 கிலோவில் ஒரு விழுக்காடு கணக்கிட்டு அடுத்த வாரத்தில் 990 கிராம் எடையைக் குறைக்க முயற்சிக்கவும். இப்படி தொடர்ந்து செய்தால் நீங்கள் ஒரு மாதத்தில் 3 கிலோ 400 கிராம் எடையை குறைத்து இருப்பீர்கள். இதில் பெரும்பாலும் கொழுப்பு தான்.
3) இலக்கு வைத்து செயல்படுங்கள். ஒவ்வொரு வாரமும் குறைக்க வேண்டிய எடையை முன்கூட்டியே கணக்கிட்டு வாரம் முடிந்தவுடன் அதே அளவில் எடையைக் குறைத்து உள்ளீர்களா என செக் செய்யுங்கள்.
4) கொழுப்பு கரைக்க நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு மிக முக்கியம். இதற்கு இரண்டு விதிமுறைகள் உள்ளன.
திடீரென உடல் எடை அதிகரித்து இருந்தால் = உடல் எடை * 2.2 * 12
நீங்கள் 100 கிலோ எடை இருந்தால் 2,640 கலோரிகள் உட்கொள்ளலாம். இது நீங்கள் ஏற்கெனவே எடுத்துக் கொண்டு இருக்கும் கலோரி அளவை விட குறைவானதாகும்.
சிறுவயதில் இருந்தே எடை அதிகமாக இருக்கும் நபராக இருந்தால் = உடல் எடை*2.2*10 = 2,200 அளவு கலோரிகள் உட்கொள்ளவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த அளவுகளை மாற்றுங்கள்.
5) உட்கொள்ளும் கலோரிகளில் 30 விழுக்காடு புரதம், 25 விழுக்காடு ஆரோக்கியமான கொழுப்பு, 45 விழுக்காடு மாவுச்சத்து இடம்பெற வேண்டும். புரதம் மட்டுமே உட்கொண்டு கொழுப்பை கரைக்க முடியாது.
6) கலோரிக்கு ஏற்ற ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்ள உணவுமுறையை திட்டமிடுங்கள். உங்களுக்கு பிடித்த உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து அளவுகளை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப சாப்பிடும் அளவை மாற்றவும். இதற்கு சில செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது.
7) தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யாமல் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பது கடினம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu