குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (கோப்பு படம்)
சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப்பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்வு முறை: குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். அதாவது 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
இரண்டாம் பகுதியில் பொதுஅறிவியல் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். தேர்வுக்கான மொத்த கால அளவு 3 மணி நேரம். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 1.5 மதிப்பெண்கள் 200 கேள்விகள் என 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
பாடத்திட்டம்: தமிழ் மொழிப் பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பொதுஅறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
திறனறி வினாக்கள் பகுதியில், சுருக்குக, சராசரி, மீ.சி.ம, மீ.பெ.வ, விகிதம், தனிவட்டி, கூட்டு வட்டி, பரப்பளவு, கன அளவு, வேலை மற்றும் நேரம், எண் கணிதம், பகடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
குரூப் 4 தேர்வுக்கான சிலபஸ் தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்வாணையத்தின் பாடத் திட்ட பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான சிலபஸை டவுன்லோட் செய்ய விரும்புபவர்கள் www.tnpsc.gov.in இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு நியமனம் என்ற டேப்-ஐ தொட்டால், கீழே சிலபஸ் என்ற டேப் வரும். அதனை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்குக் கொண்டு செல்லும்.
அந்தப் பக்கத்தில் தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் என்பதை கிளிக் செய்தால், புதிய பக்கத்தில் தேர்வுக்கான முழு சிலபஸ் காண்பிக்கப்படும். அதனை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
மறுபுறம் தேர்வர்கள் நேரடியாக https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று, சிலபஸை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu