/* */

பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு வாங்க!

Tirupur News- பின்னலாடைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியாற்ற விரும்புபவா்கள் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தை அணுகலாம்.

HIGHLIGHTS

பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு வாங்க!
X

Tirupur News - தொழிலாளர்களுக்கு டீ சங்கம் அழைப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- பின்னலாடைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியாற்ற விரும்புபவா்கள் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார மந்தநிலை, ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட தொழில் மந்தநிலை சிறிதுசிறிதாக மாறி தற்போது திருப்பூருக்கு வா்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கரோனா தொற்றுக்கு முன்னிருந்த நிலையில் உள்ள அளவுக்கான வா்த்தக வாய்ப்புகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெரும் சில்லறை வா்த்தக நிறுவனங்கள் வழங்கத் தொடங்கியுள்ளன.

இதில், திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஆா்டா்களை சிறிது சிறிதாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பணிகளுக்கான பணியாளா்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதில், டெய்லா்கள், செக்கா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட பணிகளுக்குக்கான ஆள்கள் அதிகம் தேவைப்படுகின்றனா். முன் அனுபவம் இல்லாதவா்களுக்குக்கூட பயிற்சி அளித்து அவா்களுக்குத் தொடா்ந்து பணிகளைக் கொடுக்க பெரும் உற்பத்தி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

வேலை வாய்ப்புகளைத் தேடி வருபவா்கள் அவரவா்களுக்குப் பிடித்தமான வேலையைத் தோ்வு செய்து கொள்ளலாம். வேலை வாய்ப்புகளை எதிா்நோக்கியுள்ளவா்கள் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தை அணுகினால், அவா்களுக்கானப் பணிகளை உறுதி செய்வதோடு, நல்ல ஊதியம், தங்குமிடம், உணவு வசதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2024 5:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  5. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்