ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
ரயில்வே பாதுகாப்பது படையினர் (கோப்பு படம்)
தென்னக இரயில்வே பாதுகாப்பு பிரிவில் (Southern Railway Protection Force) 452 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கும் மற்றும் 4208 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கும் (மொத்தம் 4660 பணியிடங்கள்) ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்., 15ம் தேதி இந்த விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்ப வசதி தொடங்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் பணியில் சேர விரும்புபவர்கள் வரும் 14.5.2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வெப்சைட் முகவரி:- www.rrbchennai.gov.in மற்றும் www.rrbthiruvananthapuram.gov.in
சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு இருந்தால் போதுமானது மற்றும் வயது வரம்பு 20 முதல் 28 ஆகும். கான்ஸ்டபிள் பதவிக்கு 10-வது வகுப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் வயது வரம்பு 18 முதல் 28 ஆகும். தகுதியானவர்கள் விண்ணப்பித்து பலன் பெறலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu