/* */

நாமக்கல்லில் மீன் வளர்ப்பில் தீவன மேலாண்மை இலவச பயிற்சி

நாமக்கல்லில் மீன் வள்ப்பில் தீவன மேலாண்மை குறித்து வரும் 22ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மீன் வளர்ப்பில் தீவன மேலாண்மை இலவச பயிற்சி
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் வேளாண்மைஅறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வரும் 22ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மீன் வளர்ப்பில் தீவன மேலாண்மை என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் பண்ணைக் குட்டைக்கு தேவையான இடம் மற்றும் நீர் தேர்வு செய்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், மீன் குஞ்சு மற்றும் தாய் மீன்களுக்கான இயற்கை மற்றும் செயற்கை உணவு உற்பத்தி முறை குறித்தும், மத்திய அரசின் மீன் வளர்ப்புக்கான மானியங்கள் குறித்தும், இப்பயிற்சியில் விரிவாக கற்றுத்தரப்படும். பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளோர் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்ற கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 Jun 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?