/* */

பிரதமரின் திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடன் உதவி

நாமக்கல் மாவட்டத்தில், பாரத பிரதமரின் திட்டத்தின்கீழ் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் கடன் உதவி பெறலாம்.

HIGHLIGHTS

பிரதமரின் திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடன் உதவி
X

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பாரத பிரதமரால் 2020-2021ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை, வலுப்படுத்தும் வகையில் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு கோழித்தீவனம் மற்றும் முட்டை சார்ந்த பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது தவிர ஏற்கனவே வேளாண் விளைபொருள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் செய்து வரும் சிறு நிறுவனங்களும் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை வணிகத்துணை இயக்குநரை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 July 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்