/* */

மோகனூர்-நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை மாற்றியமைக்க விவசாயிகள் கோரிக்கை

மோகனூரில் இருந்து நெரூர் வரை காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்கக் கோரி விவசாயிகள் முதல்வருக்கு வேண்டுகோள்.

HIGHLIGHTS

மோகனூர்-நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை மாற்றியமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள். 

தமிழ்நாடு விவசாய முன்னேற்றக்கழகம் சார்பில், நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம், மோகனூரில் நடைபெற்றது. சங்க செயலாளர் பாலசுப்ரமணியம், பாமக மாநில துணைத்தலைவர் லட்சுமணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்லைவர் வக்கீல் செல்லராஜாமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழக சட்டசபையில், கடந்த ஆக. 23ம் தேதி நடைபெற்ற பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின்போது, நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். இதை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அவைரும் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். கடந்த ஆட்சியின்போது இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாகிய நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பனை அமைக்கப்படும் எனவும், இதற்கான ஆய்வுப்பணிக்காக ரூ.25 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் என்பதை மாற்றி மோகனூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே காலிரி ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டால் மோகனூருக்கும் மேற்கு பகுதியில் மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கும். மோகனூருக்கு கிழக்கு பகுதிக்கு தண்ணீர் வராமல் விவசாய நிலங்கள் காய்ந்து பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். மேலும் மோகனூர் - நெரூர் இடையே காவிரி ஆற்றின் நீளம் 1,126மீட்டர் ஆகும். ஆனால் ஒருவந்தூர் - நெரூர் இடையே காவிரி ஆற்றின் நீளம் 905மீட்டர் ஆகும். மோகனூர் - நெரூரை விட, ஒருவந்தூர் - நெரூர் இடையே தடுப்பணை அமைத்தால் 220மீட்டர் தூரம் குறைந்து, திட்ட செலவு மிகவும் குறையும். மேலும் மோகனூருக்கு கிழக்குபுறம் காவிரியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியைச் சார்ந்த சுமார் 10ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும், காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன கொரம்புக்கு தண்ணீர் வராமலும், ஒருவந்தூர் நீரேற்றுப்பாசன கூட்டுறவு சங்கத்தின் மூலம் காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து பாசனம் பெறும் 870 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு பாலைவனமாகும். ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் செயல்பட்டு வரும் பட்டணம் சீராப்பள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 356 கிராமங்களுக்கு செல்லும் குடிதண்ணீர் முழுவதும் தடைபடும் அபாயம் உள்ளது.

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 10ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு காட்டுப்புத்தூர் வாய்க்கால் மூலம் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடின்றி விவசாயம் செய்திடவும், பட்டணம் சீராப்பள்ளி கூட்டுக்குடிநீர்திட்டம் பாதிக்கப்படாமல் சிறப்பாக செயல்படவும், ஒருவந்தூர் நீரேற்றுப்பாசன கூட்டுறவு சங்கம் உட்பட அனைத்து நீரேற்றுப்பாசன சங்கங்களும் தண்ணீர் தட்டுப்பாடின்றி இயங்கிடவும், ஒருவந்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படவும், தற்போது அறிவித்துள்ள நாமக்கல் மாவட்டம் மோகனூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே தடுப்பணை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, நாமக்கல் மாவட்டம் மோகனூருக்குப் பதிலாக நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் அல்லது வடுகப்பட்டி - கரூர் மாவட்டம் நெரூர் இடையே சுமார்ரூ.700கோடி மதிப்பீட்டில் கதவணையுடன்கூடிய தடுப்பணை அமைக்கப்படவேண்டும்.

இதன்மூலம் நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டியிலிருந்து மணப்பள்ளி, பேட்டப்பாளையம், மோகனூர், ஒருவந்தூர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த உன்னியூர், சின்னப்பள்ளிபாளையம், பெரியபள்ளிபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், ஆலாம்பாளையம், சீலைப்பிள்ளையார்புத்தூர், காடுவெட்டி, நத்தம், புத்தூர், பாலசமுத்திரம், ஆகிய ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கிய காட்டுப்புத்தூரைச் சேர்ந்த 10ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் சிறப்பாக பாசனவசதி பெற்று அப்பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டமும் உயர்ந்து, விவசாயம் செழிக்கும் பூமியாக மாறும். எனவே தற்போதைய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாமக்கல் மாவட்டம் மோகனூருக்குப் பதிலாக நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் அல்லது வடுகப்பட்டி-கரூர்மாவட்டம்-நெரூர் இடையே கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 10,00 கோரிக்கை மனுக்கள் தபால் மூலம் அனுப்ப முடிவு செய்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் முதல் கட்டமாக இன்று 500 கோரிக்கை மனுக்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் விரைவில், விவசாயிகளைக் கூட்டி அடுத்த கட்டம் போராட்டம் குறித்து அறிவிப்பது என்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 29 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...