/* */

காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: முதல்வருக்கு கொங்கு ஈஸ்வரன் நன்றி

காலிங்கராயன் அத்திக்டவு - அவிநாசி திட்டம் பெயர் சூட்ட நடவடிக்கை எடுத்துள்ள, தமிழக முதல்வருக்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: முதல்வருக்கு கொங்கு ஈஸ்வரன் நன்றி
X

கொமதேக பொது செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ.,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான, இ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அவிநாசி - அத்திக்கடவு திட்டம், கொங்குநாடு பகுதி மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வந்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி, ஏற்கனவே எனது தலைமையில் 186 கி.மீ. நடை பயணம் நடத்தப்பட்டது. கொங்கு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று துவக்கப்பட்ட, அவிநாசி - அத்திக்கடவு திட்டம் தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் அணைப்பகுதியில் தண்ணீர் எடுக்கப்பட்டு, அவிநாசி வழியாக அன்னூர் வரை பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. 700 ஆண்டுகளுக்கு முன்பு காலிங்கராயன் அணையை, காலிங்கராயன் கட்டி, காலிங்கராயன் பாசன வாய்க்காலை நிர்மாணித்து, பவானி நதியையும், நொய்யல் நதியையும் இணைத்து, அப்போதே நதிகள் இணைப்பு செய்துள்ளார்.

தற்போது அந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர் எடுப்பதால், அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் காலிங்கராயன் பெயரை சேர்ப்பது, பொருத்தமானது மட்டுமல்ல , அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். இது காலிங்கராயனுக்கு புகழ் சேர்ப்பதாக அமையும்.

எனவே இந்த திட்டத்திற்கு காலிங்கராயன் அத்திக்கடவு -அவிநாசி திட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கடந்த ஏப். 10ம் தேதி தமிழக சட்டசபையில் பேசி வேண்டுகோள் விடுத்தேன். மேலும் இது குறித்து கடந்த ஆக. 16ம் தேதி தமிழக முதல்வரிடமும், நீர்வளத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தேன்.

தற்போது, தமிழக முதல்வர் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில், இந்த திட்டத்திற்கு, காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்று பெயர் சூட்டுவதற்காக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, மாநில நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் முத்தையா, கோவை மண்டல தலைமைப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பெயர் சூட்ட நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதல்வர் மற்றும் நீர்பாசனத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளவதாக அந்த அறிக்கையில் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Updated On: 15 Sep 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!