/* */

தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ ஸ்வாமி திருக்கோயில் எனும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் ஸ்ரீசேனை முதன்மையார் புறப்பாடுடன் தொடங்கியது

HIGHLIGHTS

தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
X

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் கொடியேற்றப்பட உள்ள பட்டம் புறப்பாடு நடைபெற்ற போது.

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது அதில் காஞ்சி அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் என கூறப்படும் வரதராஜ பெருமாள் மற்றும் அத்திவரதர் திருக்கோயிலின் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ செல்வர உற்சவத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ விழா தொடங்கிய நிலையில் நாள்தோறும் காலை மாலை வேலைகளில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ தேவராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காஞ்சிபுரத்தின் நகர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்

அவ்வகையில் கொடியேற்ற விழா திங்கள்கிழமை அதிகாலை 2 30 க்கு துவங்கி 3.45 மணிக்குள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே பிரமோற்சவ கொடி ஏற்றும் விழா நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை நாலு மணிக்கு கருட சேவை வாகனத்தில் காலை 5 மணிக்கு ராஜகோபுரம் அருகே ஸ்ரீ தேவராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து நகர் வலம் வருவார்.

மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டே கால் மணிக்கு திருக்கோயிலில் இருந்து தேவராஜ் சுவாமி புறப்பட்டு காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகே அமைந்துள்ள திருத்தேர் நிலைக்கு எழுந்தலி பக்தர்களுக்கு அருள் பாலித்த பின் காலை ஆறு மணி அளவில் பொதுமக்கள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் இணைந்து வடம் பிடித்து திருத்தேர் உற்சவம் புறப்படும்.

மற்றுமொரு முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் வருகின்ற 28ஆம் தேதி காலை 10 மணிக்கு திருக்கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் நடைபெறும்.

பிரம்மோற்சவ விழாவில் காலை மாலை சுவாமி புறப்பட்டு நடைபெறும் நிலையில், நகரில் போக்குவரத்து மற்றும் சாலை தடுப்புகள் என அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு நகர சாலைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 18 May 2024 2:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'அனல் பறக்கும்': மக்களவை கூட்டத்தொடர் குறித்து பா.ஜ.,வுக்கு...
  2. இந்தியா
    பீகாரில் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்
  3. இந்தியா
    நீட் பிரச்சினையில் மௌனம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
  4. சினிமா
    மருமகள் இன்றைய எபிசோட்!
  5. சினிமா
    மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024
  6. சினிமா
    சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..!
  7. நாமக்கல்
    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்
  8. மதுரை மாநகர்
    மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக...