/* */

நொறுங்கியது நாமக்கல் முட்டை விலை:ஒரு முட்டை விலை ரூ. 3.80

நாமக்கல் மண்டலத்தில் ஒரு மாதத்தில் ஒரு முட்டைக்கு 80 பைசா குறைந்தது. இன்று ஒரே நாளில் 25 பைசா குறைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.

HIGHLIGHTS

நொறுங்கியது நாமக்கல் முட்டை விலை:ஒரு முட்டை விலை ரூ. 3.80
X

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.05 ஆக இருந்த முட்டை விலை, 25 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் முட்டை வியாபாரிகளுக்கு வழங்கக்கூடிய மைனஸ் விலை ஒரு முட்டைக்கு 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது.

இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.50 மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. கடந்த பிப்.1ம் தேதி ஒரு முட்டையின் என்இசிசி விலை 4.60 ஆக இருந்தது. 25 நாட்களில் ஒரு முட்டைக்கு 80 பைசா குறைந்து ஒரு முட்டையின் விலை ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடும் சரிவால் பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 425, பர்வாலா 345, பெங்களூர் 405, டெல்லி 3655, ஹைதராபாத் 346, மும்பை 405, மைசூர் 405, விஜயவாடா 360, ஹொஸ்பேட் 365, கொல்கத்தா 425.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 120 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.60 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 26 Feb 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்