/* */

நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடப்பணி: கலெக்டர் ஆய்வு

நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடப்பணி: கலெக்டர் ஆய்வு
X

நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை, கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், கலெக்டர் ஆபீஸ் பின்புறம் சுமார் 20 ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் ரூ.338 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு, இக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாண்டு வகுப்புகள் துவக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் வெளி மாநில தொழிலாளர்களைக் கொண்டு வந்து, இரவு பகலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது கல்லூரி வகுப்பறைக் கட்டிடம், நிர்வாக அலுவலகம், லேபாரட்டரி, டீன் அலுவலர் அலுவலகம், டாக்டர்கள் மற்றும் பேராசிரியர் குடியிருப்புகள் போன்ற கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், இந்த மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், புதிய மருத்துவக்கல்லூரி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவக்கல்லூரியின் கட்டிடங்கள் அமைந்துள்ள வரைபடம், நிர்வாக அலுவலகம், மாணவர்களுக்கான வகுப்பறைகள், லேபாராட்டரிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுப் பெற்றார்.

Updated On: 28 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...