/* */

மஹாளய அமாவாசையையொட்டி மோகனூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மஹாளய அமாவாசையையொட்டி மோகனூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

மஹாளய அமாவாசையையொட்டி  மோகனூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
X

மோகனூர் காவிரி கரையில் மகாளய அமாவாசையையொட்டி காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக குவிந்தவர்கள்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரிக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்காக, ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ய கால தர்ப்பணம், மஹாளய பட்சம் ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை நாளில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியை பெறலாம் என்பது ஐதீகம். இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மோகனூர், காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஈஸ்வரன் கோயில் படித்துறையில், அதிகாலை முதலே, ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் காவிரியில் புனித நீராடி, அசலதீபேஸ்வரரை வழிபட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக மோகனூரில் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவிரி ஆற்றுப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 25 Sep 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!