/* */

தின்னர் திரவம் குடித்த 3 வயது குழந்தை பலி: தீவிர சிகிச்சையில் மற்றொரு குழந்தை

பள்ளிபாளையம் அருகே, தண்ணீர் என நினைத்து தின்னர் திரவத்தை இரண்டு குழந்தைகளும் குடித்துள்ளன

HIGHLIGHTS

தின்னர் திரவம் குடித்த 3 வயது குழந்தை பலி:   தீவிர சிகிச்சையில் மற்றொரு குழந்தை
X

பைல் படம்

பள்ளிபாளையம் அருகே, தண்ணீர் என நினைத்து தின்னரைக் குடித்த 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு குழந்தைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்தரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கல்லாங்காடு பகுதி சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தேஜூ ஸ்ரீ (3), மவுலி ஸ்ரீ (5) என இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர் தனது வாகனத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக, பெயிண்ட்டுடன் கலக்கும் தின்னர் பாட்டில் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார். நேற்று வீட்டில் இருந்த அவரது குழந்தைகள், தண்ணீர் என நினைத்து தின்னர் பாட்டிலைத் திறந்து இருவரும் தின்னரைக் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இரு குழந்தைகளையும் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, குழந்தை தேஜூ (3) உயிரிழந்தார். மற்றொரு குழந்தை மவுலி ஸ்ரீக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 April 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்