/* */

சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா: பணியாளருக்கான விளையாட்டு போட்டி

The Health Department -பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும், அத்துறை பணியாளர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா:  பணியாளருக்கான விளையாட்டு போட்டி
X

பைல் படம்.

The Health Department -நாமக்கல் மாவட்டத்தில், பொது சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு, பேட்மிட்டன், கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, கபடி, கோகோ போன்ற போட்டிகளும், 100 மீ., 400., மீ., ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் இரண்டு வாரம் நடைபெறுகிறது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில், விளையாட்டுப்போட்டி நேற்று துவங்கியது.

முதலில் நடந்த இறகு பந்து போட்டியை கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, சுகாதாரத்துறை பணியாளர்களுடன் இறகு பந்து விளையாடினார். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து தினசரி போட்டிகள் நøடெபறுகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அக். 26ல் நடைபெறும், பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா, ஒளி சுடர் வருகை தரும் போது பரிசுகள் வழங்கப்படும்.

மேலும், போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 24 Sep 2022 9:52 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...