/* */

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 56 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை தினமான ஆக. 15ம் தேதி, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அதற்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 தினங்களுக்குள் ஒரு மாற்று விடுப்பு அளிக்க வேண்டும் என்பது விதிமுறை. இவை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்படி கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 83 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 56 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. அதேவேளையில் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி அதன் நகலை சம்மந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஒப்புதலும் பெறாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட 56 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 15 Aug 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.