ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
X

Erode news- வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஈரோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா.

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றத் தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டு, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதுகாப்பு இருப்பறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையம் முழுமைக்கும் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஈரோடு மாவட்ட போலீசாரைக் கொண்ட மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வாக்கு எண்ணும் மையத்தை ஈரோடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (நேற்று) ஆய்வு செய்தாா்.

அப்போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறைகளை பாா்வையிட்டார். பின்னர், தனது ஆய்வு தொடா்பாக அங்குள்ள பதிவேட்டில் அவர் கையொப்பமிட்டாா்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!