/* */

பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு

பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா, கோழிப்பண்ணைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
X

நாமக்கல் அருகே உள்ள கோழிப்பண்ணை ஒன்றில், பறவைக்காய்ச்சல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை, மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா, கோழிப்பண்ணைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் சில பகுதிகளில், வாத்துப் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1,175 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6.35 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப் பண்ணையின் நுழைவு வாயிலில் தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைத்து, உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆட்சியர் ஏற்கனவே அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளிசெல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு கோழிப்பண்ணையாளர்கள் சுத்தம் செய்திட வேண்டும். அனைத்து கோழிப்பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கவும், வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் அசாதாரண இறப்பு ஏற்படின் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கோழிப்பண்ணை உரிமையாளர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட 47 அதிரடிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவில் உள்ளவர்கள், மாவட்டம் முழுவதும் உள்ள பண்ணைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், தளிகை ஊராட்சியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்படும் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உயிரி பாதுகாப்பு முறைகள் குறித்து பண்ணையாளர்களிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 23 April 2024 10:00 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...