/* */

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு திமுக சார்பில் பாராட்டு

Namakkal District News - எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கு எம்.பி ராஜேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு திமுக சார்பில் பாராட்டு
X

தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

Namakkal District News -தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கான மற்றும் பாண்டிச்சேரியை உள்ளடக்கிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல்லை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

சங்க தலைவராக வெற்றிபெற்ற சுந்தரராஜன், செயலாளர் இளங்கோ, துணைத்தலைவர் பிரபாகரன், இணை செயலாளர் வேல்முருகன் கோபிஆகியோர், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்கு சென்று மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, சுற்றுலாத்துறை அமøச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோரை சந்தித்தினர். அவர்களுக்கு அமைச்சர், எம்.பி, எம்எல்ஏ ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

திமுக பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன்,நகராட்சி துணைத்தலைவர் பூபதி, தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், மேற்கு நகர செயலாளர் பூபதி, ஒன்றிய செயலாளர்கள் மோகனூர் நவலடி, எருமப்பட்டி பாலசுப்ரமணியம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Sep 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு