/* */

அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம் 

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கோயம்புத்தூர் ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்ததின் மூலம், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு 2024-25 க்கான அக்னிவீர் சேர்க்கைக்கான தேர்வுக்கு, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் (கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தர்மபுரி) குடியிருப்பவர்கள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 13 முதல் மார்ச் 22 வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும், ஆன்லைன் தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் நடைபெற உள்ளது.

2024-25க்கு அக்னிவீரர்களின் ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதற் கட்டமாக, ஆன்லைன் கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (ஆன்லைன் CEE) மற்றும் இரண்டாம் கட்டமாக ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ராணுவத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். இந்திய ராணுவத்தில் தேர்வு அல்லது ஆட்சேர்ப்புக்கு எந்த நிலையிலும் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. ஆட்சேர்ப்பு முகவர்களாக காட்டிக் கொள்ளும் நேர்மையற்ற நபர்களிடம் விண்ணப்பதாரர்கள் ஏமாற வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Feb 2024 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்