Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 19 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்கள்

இன்று குரோதி - வைகாசி 6 - மே 19 - ஞாயிறு

நல்ல நேரம்: காலை 7.30 - 8.30 மாலை 3.30-4.30

திதி: வளர்பிறை ஏகாதசி பகல் 2.53 பிறகு துவாதசி

நட்சத்திரம்: அஸ்தம் அதிகாலை 4.09 பிறகு சித்திரை

யோகம்: அமிர்த சித்தயோகம்

வார சூலை: மேற்கு

குளிகை: மாலை 3.00 – 4.30

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

சந்திராஷ்டமம்: அவிட்டம்

சூரிய உதயம்: நாளை 5.53 அஸ்தமனம்: இன்று மாலை 6.32

தினப்பலன்

மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்: எல்லா விஷயத்திலும் துணிச்சலாக இறங்கி சாதிப்பீர்கள். பொருளாதாரத்தில் குறைவிருக்காது. பரணிக்கு குடும்ப சிக்கல் நீங்கும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: இரண்டு மாதங்களாக நீடித்த பொருளாதார நெருக்கடி தீரும். ரோகிணிக்கு பரிசு காத்திருக்கிறது. மிருகசீரிடத்துக்கு பயண செலவு ஏற்படும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதம்: தேவையற்ற சங்கடங்கள் ஒருவழியாக தீரும். திருவாதிரைக்கு அரசு ஆதாயம் கிடைக்கும். புனர்பூசத்துக்கு ஆன்மிக பயணம் உண்டு.

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்: தொழில் ரீதியான சங்கடங்கள் விலகும். பெரிய ஆதாயம் காத்திருக்கிறது. நண்பர்களால் வரவு. ஆயில்யத்தினர் பிறரிடம் கவனமாக பேசணும்.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்: எல்லா கவலைகளும் விலகும். பூரத்துக்கு வாரிசுகளால் உதவி ஏற்படும். மகத்தினர் சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபடக் கூடாது.

கன்னி : உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்: எதைத் தொட்டாலும் இரட்டைவெற்றிகிடைக்கும். உத்திரம் பெண்களிடம் கவனமாக பேச வேண்டும். அஸ்தத்துக்கு அதிர்ஷ்ட நாள்.

துலாம்: சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்: குடும்ப ரீதியாக அனுபவித்துவரும் சங்கடங்கள் எல்லாம் விலகும். சொத்து வழக்கில் வெற்றி செய்தி வரும். விசாகத்துக்கு சிறிய செலவு உண்டு.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை: தேவையற்ற இடையூறுகள் விலகி, பெரிய சந்தோஷம் ஏற்படும். அனுஷத்தினர் பிறரிடம் கவனமாக பேச வேண்டும்.

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: எவ்லாவித போராட்டத்துக்கும் முடிவு கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும். ஊர்மாற்றம், இருப்பிட மாற்றம் ஏற்படலாம்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ம்பாதம்: ஒரு விஷயத்தை சாதித்து முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். திருவோணத்துக்கு வாழ்க்கைத் துணையால் வாபம் ஏற்படும்.

கும்பம்: அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம் : புதிய அனுபவம் ஏற்படும். நம்பியவர்கள் உதவுவார்கள். சதயத்துக்கு விஐபிக்களால் ஆதாயம் | உண்டாகும். பூரட்டாதிக்கு திடீர் பணவரவு.

மீனம்: பூரட்டாதி4ம்பாதம், உத்திரட்டாதி, ரேவதி: செலவுகள்அதிகரிக்கும். அதேநேரம் வரவுகளும் இருக்கும். உத்திரட்டாதியினர் உறவுகளுடன் நீண்டதூர பயணம் மேற்கொள்வர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!