பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்

பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
X

பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு அடுத்த இராமச்சந்திராபுரம் ஊராட்சியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இந்த ஆலய மகா கும்பாபிஷேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் மீண்டும் மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கிராம பெரியோர்கள், பொதுமக்கள் முடிவு செய்து அவர்களின் பங்களிப்புடன் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த17-ஆம் தேதி அன்று திருக்கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு மங்கல இசை, திருமுறை பாராயணம், பூர்ணாகுதி, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அன்று மாலை முதல் காலையாக பூஜை, இதனைத் தொடர்ந்து நேற்று 18- ஆம் தேதி அன்று இரண்டாம் காலையாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

இன்று மூன்றாம், மற்றும் நான்காம் காலையாக பூஜைகளான நவகிரக ஹோமம், மஹா பூர்ணாஹூதி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூன்று முறை கோவில் சுற்றி வளம் வந்து பின்னர் கோபுரத்தின் மீதுள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் விதமாக முழக்கமிட்டனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது .இரவு உற்சவர் கிராம முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழாவும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய விழா குழுவினர் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி